Thursday, May 2, 2013

Recent shares in Facebook


••
வாழ்வின் மிகப் பெரிய போராட்டம் .. 'நீ நீயாகவே இருக்கத் தான்'
என்கிறார் Leo F.Buscaglia.
••
# சரியா சொன்னிங்க பாஸ் !


••
நன்கு பேசத் தெரிந்தவர்கள் பெரும்பாலும் அமைதியாகவே அத்தனை நிமிடங்களையும் கடந்து போய் விடுகிறார்கள் ! 
••

•• பொறாமைகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் பாராட்டுக்கள் ••

பிரபாகரன் சேரவஞ்சி

••
தற்காலிக உணர்ச்சி வேகத்தில் நிரந்தரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள் ! 
••

பிரபாகரன் சேரவஞ்சி 

••
நம்பிய பொய்கள் உண்மை தெரிந்த பின் நெஞ்சைக் கொல்லும் . 
சிரித்த உண்மைகள் என்றென்றும் நெஞ்சிலேயே தங்கிக் கொள்ளும்
••

பிரபாகரன் சேரவஞ்சி

••
கேட்கிற அனைத்தும், ஒரு கருத்து மட்டுமே , உண்மையல்ல. பார்க்கிற அனைத்தும் ஒரு பார்வையே, உண்மையல்ல. அப்போ எதுதான் உண்மை'ன்னு கேக்குறிங்களா? உண்மை பொய் எல்லாமே மாயை தான் போலிருக்கு....எது எப்டின்னு எடை போடாம ஜாலியா வாழுங்க பாஸ்.... எடை போடாம எப்டி ஜாலியா இருக்குறதுன்னு கேக்குரிங்களா .... யோவ்.. போய்யா... :) :)
          ••

 


••
சிலர் வரம் , சிலர் பாடம் . வரமாகும் மனிதர்கள் ஆழ்நெஞ்சிலும் , பாடம் சொல்லும் மனிதர்கள் மூளையிலும் தங்கிக் கொள்கிறார்கள் !
••
பிரபாகரன் சேரவஞ்சி


••
Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.
Isaiah 43:19
••
எல்லா கசப்புணர்வுகளும் மறையும் , வலிகள் எல்லாத்துக்கும் ஒரு வழி பிறக்கும், தெளிவும் பிறக்கும்... பொறுத்திரு... உன்ன சுத்தி இருக்கிற எல்லாத்தையும் அழகா மாத்துவேன் ... புதுப்பிப்பேன்'ங்கறார் கடவுள் ...! 
••
ஏசாயா 43:19

# அப்படியே ஆகட்டும் ! ஆமென் ..••
whenever life sucks, remember you're going to die someday ! 
••
# தக்காளி அவ்வளோதாண்டா தத்துவம் ! :)••
"இருக்குமிடத்தில், இந்த நொடியில், இன்புற்றிரு"

-இங்கர்சால் 
••


••
எது வேண்டாமோ அதைத் தேடாமல் இரு.ஏனெனில் எது வேண்டுமோ அது உன்னைத் தேடித் தவித்துக் கொண்டிருக்கிறது !
••
பிரபாகரன் சேரவஞ்சி

••
'மேகம் 
கடகடவென்று சிரித்துவிட்டு 
மழையாக இறங்கியது.
நனைந்து சிலிர்த்த 
பூமி சொன்னது :
பெருமை 
மேலே ஏறுவதில் இல்லை 
கீழே இறங்குவதில் இருக்கிறது ! '
••
கவிக்கோ அப்துல் ரகுமான் 


••
எந்தத் துன்பத்திலும் தோள் கொடுக்கிற அன்பைத் தேடிக்கொள் ! எந்தக் கைகள் உன் கைகளிலிருக்கும் கவலைகளை பிடுங்கி எறிந்துவிட்டு தன்னை இணைத்துக் கொள்ளுமோ அங்கே சென்று சேர்ந்து கொள்.நிம்மதியாய் வாழ் !
••

God is one


••
நபிகள் நாயகம் ஒரு நாள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார் . அவரை சந்தித்து உரையாட ஒரு கிறிஸ்தவ பாதிரியார் வந்தார் . இருவரும் நீண்ட நேரம் இதயம் கலந்து பேசி மகிழ்ந்தனர் .தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் நேரம் வந்துவிட்டது .என்று கூறியபடி பாதிரியார் எழுந்தார். கொளுத்தும் வெய்யிலில் ஏன் உங்களை வருத்திக் கொள்ளவேண்டும் ?நீங்கள் விரும்பினால் இங்கேயே இறைவனை பிரார்த்திக்கலாமே' என்று நபிகள் சொன்னதும் நெஞ்சம் நெகிழ்ந்த பாதிரியார் , அந்தப் பள்ளிவாசலின் ஒரு மூலையில் முழந்தாளிட்டு தேவனைப் பிரார்த்தித்தார்.

பாதிரியார் விடைபெற்று சென்ற பின் நாயகத்தின் தோழர்கள் , ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் இங்கு பிரார்த்தனை செய்தால் பள்ளிவாசலின் தூய்மை பறிபோய்விடாதா ? என்று பதட்டத்துடன் கேட்டனர். 

' நாம் வணங்கும் இறைவனும் அவர் வணங்கிய இறைவனும் ஒருவரே ' 
என்று அமைதியாக பதிலளித்தார் நபிகளார். இந்த உணர்வும் பார்வையும் தான் நம் உயிரின் முழு முதற் தேவை !

இறைவன் ஒருவனே ! மனிதர்களை நேசியுங்கள் . அன்பில் இறைவனைக் காணுங்கள் ! 
••
படிச்சதில் ரொம்பப் பிடிச்சது # 04

Dad is God !


••
எத்தனையோ சரிவுகளுக்குப் பின்னும் தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை.
••
Prabhakaran Cheravanji