Friday, November 1, 2013

இனியும் நம்புவோம்.இனியும் தோற்போம்.

நாம் கடந்து வந்த பாதையை , நடந்து கொண்டே நம்மோடு இதைப்போலொரு மழையிரவில் பொறுமையாய் கேட்டுக் கொண்டு வரும் மனிதர்கள் கிடைப்பது அரிது. 'ஹ்ம்ம்' கொட்டிக் கடந்து போகும் மனிதர்களைப் போல அல்ல இவர்கள். 

கேட்கிற காதுகள் சிலருக்கு மட்டுமே உண்டு. கேட்டதை புரிந்து கொள்பவர்கள் அதிலும் சிலர். மேலும் நாம் யாரென நம் நிஜத்தின் பிம்பமெல்லாம் பார்த்தறிந்தவர்கள் அதையே பின்னாளில் நமக்கெகெதிரான ஆயுதமாய்ப் பயன் படுத்தித் தோற்கடிக்க வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாது தோள் கொடுத்து நிற்பவர்கள் அதனினும் இன்னும் சிலர்.

இந்தக் கடைசி இன்னும் சிலரில் இருப்பவர்களைக் தேடிக் கண்டடைய இதற்கு முன் இருக்கும் எத்தனை இன்னும் சிலரிடம் தோற்க வேண்டி இருக்கிறது.

எப்படியோ தோற்றே பழகி அதுவும் நிலையாகி விட்டது. தேடலை நிறுத்துவானேன். இனியும் நம்புவோம்.இனியும் தோற்போம். கடைசி சிலருக்குள் இருக்கும் சிலராவது நம் வாழ்க்கையில் கிடைக்காமலா போய் விடுவார்கள் ?

எல்லாம் நன்மைக்கே



No comments:

Post a Comment