Saturday, January 19, 2013

36 Pearls from Facebook....

இனி :
---------
அழுதேன் சிரித்தேன் 
அதுகிடக்கட்டும்
ஒருபக்கம் ... 
அத்தனையிலும் 
அமைதியைத் 
தொலைத்தேனே 
அதைக் கண்டாயா நெஞ்சே ?
திடுமென இன்று 
நினைப்புத் தட்டியது ...
இனி அதற்கும் இதற்கும்
இடையில் இருக்கும்
நிசப்தம் ஒன்றை
வரமாய்க் கேட்கணும்...
நிழலாய்
நிழல் தரும் குளிராய்..
நிலமிசை நிசப்த்தத்தில்
வாழ்ந்தே காட்டனும் !

02.


தோல்விகளையோ அவமானங்களையோ புறக்கணிப்புகளையோ சந்திக்காத வெற்றியில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது!

03

இன்பதுன்பம்
கடந்த
சமநிலையை
வாழ்க்கை
அதிவேகமாய்
சொல்லிக்கொடுக்கத்
துடிக்கிறது
எல்லோருக்கும்!
சிலர் அதை விரும்பிக்
கற்கிறார்கள்
பலர் வெறுத்துக்
கல்லெறிகிறார்கள்!

04

பிறரை சிரிக்க வைத்து உன் சோகத்தைத் தணித்துக் கொள் ! 

05

ஈடற்ற பேரன்பை எங்கேயோ கண்டு, அனுபவித்து, இழந்துவிட்டு, மீண்டும் அதை இன்னொரு உயிரிடம் தேடித் தோற்கையில் ,புரியும்.... "உனக்கே உனக்கான அன்பு ஒரே இடத்தில் எழுதப் பட்டிருக்கிறது.அதை இழந்துவிட்டாலும், ரசித்துக் கொண்டே இரு ! ஏனெனில் அதுதான் உண்மை !"

06

சந்தோஷம் என்பது நமக்குக் கிடைப்பதல்ல... நாம் நமக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டியது என்று ஒவ்வொரு இரவும் பகலும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது !

சந்தோஷங்களை உருவாக்கிக் கொண்டு சந்தோஷமாய் வாழுங்கள் ! 

07

எனக்கு ஒன்றுமே வைக்காமல் 
சேரச் சேர இதயத்திலிருந்து 
எல்லாவற்றையும் 
அள்ளிக் கொடுத்து விடுகிறது 
அன்பு 
வழியில் சந்திக்கும் 
அத்தனை உயிர்களுக்கும் !!

08

யாரையோ ஈர்க்க வேண்டும் என்று நம் சுகத்தையும்,சுயத்தையும் இழந்து போலியாய் சுற்றிக் கொண்டிருக்கிறோம் !

09

தன்னை கடலளவு நேசிக்க இருவர் கூட இல்லாதவன் தான் உலகின் மிகப்பெரிய ஏழை !

10

வாழ்தலுக்கான ஆதாரத்தை, பலரை மனதளவில் கொன்று அதில் தேடிக் கொண்டிருக்கிறது உலகம் !

11
அன்பு 
சிரித்துக் கடந்து
போகும்...
தலைகனம் 
தன் படைபலம் 
காட்டி 
எதிர்த்து நிற்கும் !

12

புலம்பித் தீர்ப்பவைகளை மாற்ற முடியவில்லை எனில் பரவாயில்லை... புலம்புவதையாவது மாற்றிக்கொள்ளுங்கள். அதுதான் சந்தோஷம் !

13

பின்னணி இசை இல்லாத உண்மை சினிமா - வாழ்க்கை !

14
பிகாசோக்கள் ரசிக்கப்படுவதே இல்லை :
-------------------------------------------------------
பிரௌனும் பச்சையும் 
ஊற்றி வளர்க்கப்பட்ட 
ஒரு மரம் 
அருகில் பாயும் 
வெள்ளையோடை
கருப்பு ஸ்கெச்சில் 
வானத்தை நிறைக்கக் 
காக்கைகள் 
நான்கைந்து கோடுகளைக் 
கொண்டு கட்டப்பட்ட 
கனவு இல்லம்....
நடக்கத் தடம்விட்டு 
தரையெல்லாம் புல்லிட்டு 
நானிப்படி வரைந்து முடித்ததும் 
வருமே ஒரு சந்தோஷம் ...
அப்போதே நான் பாப்லோ 
பிகாசோவாகிவிட்டேன் !
பாவம் இந்த ஊருக்குத்தான் 
எனை ரசிக்கவே தெரியவில்லை !

Pic Courtesy : Amutha Thamizh @ Ammukka , Osai chella
15

எத்தனை பின்னடைவுகளையும் மறக்க வைத்து மகிழ்விக்கும் ஆற்றல் - ஒரே ஒரு நம்பிக்கைக்கு உண்டு!

Stay positive. Always Believe in what you yearn to accomplish. Good Night People.Happy New Year Again.


16


ரோஜாக்களுக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் வேலையில் முள்ளில் நடக்கப் பழகிக் கொள்ளுங்கள். 

Life is all about adopting to different kinda pains,and learning to enjoy it. :)

17

சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் இடையே பரந்திருக்கும் கடலில், நீச்சல் பழகிக் கொண்டிருக்கிறேன் ! :)


18

எவை தமக்குக் கொடுக்கப்பட்டால் ரசிக்கக் கசக்கும் என்றெண்ணுகிறார்களோ , அதையே மற்றவர்களுக்குக் கொடுத்துப் பழக்கப் பட்டுவிட்டார்கள் பலர் !

19

பிறரின் நலனுக்காக தன் சிந்தனைகளை விதைக்கிறவனை எல்லாம், உலகம் இப்போது பைத்தியக்காரனாகப் பார்க்கிறது !

20

வெறுப்பை உமிழும் வார்த்தைகளுக்கும் என் பதில் அன்பை உதிர்க்கும் மௌனம் மட்டும் ! 

21

சென்னையில் , பதில் கிடைக்கவே கிடைக்காத என் தேடல் ஒன்றே ஒன்றாகத் தான் இருக்கும்... !

# அம்மாவின் தோசை ! :)

22
வசதியாய் வாழ்வது வேறு, சந்தோஷமாய் வாழ்வது வேறு ! இரண்டிற்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு புலம்புவது நம் அற்ப மனம் தான் !

23

விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவும் மனிதன் மன்னிப்பதுண்டு ! நூறு பேரை மன்னிக்கிறான் , நூறு லட்சம் பேர்களிடம் அதை சொல்லிக் கொள்கிறான் ! ஆக மன்னிப்பிற்கும் வெவ்வேறு விலையுண்டு... மனித சந்தையில் ! 
Every act of men comes with a tag price nowadays.
24

மலைகளைத் தரைதட்ட வைத்து ரசிக்கும் தேசமிது !

25

ஆணவத்தை எதிர்க்கும் அதிகாரம் அன்பிற்கில்லை ! அதை அன்பாய் ஏற்று மன்னிக்கும் அதிகாரம் மட்டுமே அன்பிற்கு உண்டு !

26

தங்களை அறிவாளிகள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களின் வெறுப்பை விட , அறிவிலிகளின் அன்பு ஆயிரம் கோடி மடங்கு சிறந்தது !

27

எதிர்ப்பைக் கண்டு முடங்கிப் போகையில் செத்துப் போகிறேன் . எதிர்த்து நின்று என் நிலை யாதென்று உணர்கையில் வாழ்கிறேன் ! அப்போது தான் நான் மெய்யாகவே வாழ்கிறேன் !

28

அழ நேர்கிற நேரங்களில் சிரிக்கக் கற்றுக் கொள்வதற்குப் பெயர் தான் வெற்றி !

29

நகைப்புக்குரியவர்கள் சில மனிதர்கள். சந்தேகப் படவேண்டியத்தை நம்பிக் கொண்டும் , நம்ப வேண்டியதை சந்தேகப் பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் ! :)

30

எத்தனை தத்துவங்கள், பேருண்மைகள் உதிர்த்தாலும் , கல்லின் காதுகளுக்கு அது வெறும் சத்தமாக, வார்த்தைகளாக மட்டும் தான் கேட்கும். கல்லைப் போல் மனிதர்கள் நிறைய உண்டு.

31

இன்னும் கொஞ்சம் 
மருந்தாகும் மௌனம், 
இன்னும் கொஞ்சம் 
ஊமைப் புன்னகை, 
இன்னும் கொஞ்சம் 
தமிழும் கவிதையும்..
இன்னும் அழகிய 
அன்பும் கொஞ்சம் 
சின்னஞ் சிறிய 
உயிரோடு 
சுற்றியிருப்பதால்
உயிர்வாழ்கிறேன் !
இன்னும் கொஞ்சம்
நம்பிக்கை
கூட்டிக் கொண்டு !

32

வரங்களும் சாபங்களும் நீ விரும்பித் தேர்ந்தெடுத்த மனிதர்கள் தான் கொடுக்கிறார்கள், என்ற வகையில் எது கிடைத்தாலும் அதில் நிறைந்திருப்பது நீயே ! 
# உன்னை உணர் !

33

ஒவ்வொரு 
குழந்தையின் 
நித்திரையிலும் 
ஒவ்வொரு 
கடவுளின் 
பாவனைகள் 
விழித்துக் கொள்கின்றன !

-பிரபாகரன் சேரவஞ்சி

34

உன் கோபத்தின் ஆழத்தை
பார்க்க விரும்புவோரைக் 
கூட்டிப்போய் 
உன் வெற்றின் ஆழத்தில் 
திரையிட்டுக் காட்டு !
மற்றபடி உன் கோபத்தை
கோபமாக எங்கேயும்
காட்டாதே !
-
பிரபாகரன் சேரவஞ்சி

35

திடீரென எங்கோ 
இதயத்தின் ஓரங்களில் இருந்து
எழும் சிரிப்பலைகள் 
சுளீரென நரம்புகளில் 
புகுந்து ஒரு ரகசியம் 
சொல்லிவிட்டு ஓய்கிறது 
"நான் மாயை "

36
உண்மை யாதென அறிந்துகொள்ள, ஒரு விரைவு வழி இருக்கிறது, பொய்யுடன் கைகோர்த்துப் பழகிப்பார்ப்பதே அது !





No comments:

Post a Comment