Sunday, April 21, 2013

Bala and Vikram Inspires...


நான் ஆக்சிடெண்ட்ல அடிபட்டுக் கிடந்தப்போ , எங்க சொந்தக் காரர் ஒருத்தர் .. அவரும் சினிமாகாரர் தான் ... இனிமே நீ எங்க சினிமால நடிக்க போற ? உனக்குன்னு ஏதாவது நொண்டி காரெக்டர் கிடைக்கும்ல'ன்னு சொன்னார்.... எவ்ளோ வக்கிரமான வார்த்தை ...நாம ஜெயிக்கணும் பாலா .... 

"பழி வாங்கறதுன்னா ... அடிக்கறது, உதைக்கிறது , அவமானப் படுத்தறது , மட்டுமில்லையே .... அவங்க கண்ணு முன்னாலேயே ஜெயிக்கணும் ..."

அப்போ நான் தனியா இருந்தேன் . இப்போ கூட நீங்க இருக்கீங்க .. சேது .இருக்கான் ..நாம ஜெயிப்போம் பாலா .... ப்ராமிஸ் பாலா ! " என்ற விக்ரமின் வார்த்தைகளை வாழ்க்கை முழுக்க நினைவில் .வைத்திருப்பேன் ...

- பாலாவின் இவன்தான் பாலா புத்தகத்திலிருந்து... 

(எனக்குப் புத்தகத்திலேயே மிகவும் பிடித்த விக்ரம் மற்றும் பாலாவின் "சேது" பிறந்த கதை செம நம்பிக்கை டானிக் (A Must read (chapter in that) Book ) )

Love begets Love


••
அன்பு என்றும் எங்கும் வீணாகிப்போவதே இல்லை... நூறு மடங்கு அதிகமாய் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் ! பொறுமையுடன், நம்பிக்கையுடன், வாஞ்சையுடன் நேசியுங்கள்....! 
••

Appreciate !


••
பாராட்டுவது மிகக்கடினமான செயல். அதை விடக் கடினமானது அதற்கான சரியான வார்த்தைகளையும் மனிதர்களையும் தேர்ந்தெடுப்பது. அதைவிடக் கடினமானது 'நான் பெரியவன்' என்கிற மனநிலை கடந்து ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்ற மன நிலைக்கு வருவது.
••
# தேர்ந்தெடுத்துச் செய்து பழகிக் கொண்டிருக்கிறேன்.
It doesn't seems to be a Tough job really. Life is all about appreciating Things and People who deserve it in a right time/place. Do appreciate ppl if you feel something is good with them.

DwellInHappiness#17

From Udhayakumar To Prabhakaran




அடை மழை உன் அன்பு 
முழுக்க நனைந்துவிட்டேன் 
மழைவிட்ட பின்னும் 
மண்வாசம் மிச்சமிருப்பது போல 
என்னிடம் இன்னும் ஒட்டி இருக்கிறது 
உனது வாஞ்சை 
உனது பெருங்காதல் 
உனது பேரன்பின் பெருநெடி 
உனது தூய நேசத்தின் குளிர் காற்று 

எல்லாம் எல்லாம் 
என் உயிரின் ஆழத்தில் இனிக்கிறது .
உன்னை வழியனுப்பி விட்டு 
ஏதோ ஒன்று குறைவதுபோலவே 
வீடுவந்து சேர்ந்துவிட்டேன் .

உன் ஆதூரம் 
என் மனவெளியெங்கும்
பூத்திருக்கிறது 
இளம்மஞ்சள் நிறத்தில் .
அத்தனையும் அழகு 
உனதன்பை போலவே :-)

Taste your words before you give it to others


••
பிறர்க்குப் படைக்கும் முன், ஒருமுறை உங்கள் வார்த்தைகளை நீங்களே ருசித்துவிட்டுப் படையுங்கள் !
••
Wisdom Quote

Fake Love



எது பொய்யோ 
அதை நிறைய 
நேசிக்க கற்றுக் 
கொண்டுவிட்டது 
உலகம் ! 
எது நிஜமோ 
அதைச் சரியாக 
சந்தேகிக்கவும் !

Prabhakaran Cheravanji 

Quotes of Prabha


••
ஒருவர் தங்கள் நியாயங்களுக்கேற்ப உங்கள் மீதான பார்வையை மாற்றிக் கொள்கிற போது . அன்போடு பொறுத்திருங்கள். அவர்களின் நியாயங்கள் அன்றாடம் மாறும் தன்மையுடவை. அவை மாறிக் கொண்டே போகும் .நீங்கள் மாறாத தன்மை உடையவர்கள் வருந்தவும் தேவை இல்லை.மாறவும் தேவை இல்லை.
••

Celeberate your life.


••
வாழ்க்கை எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறதோ அங்கெல்லாம் கடவுள் நிறைந்து இருக்கிறார் 
••
OSHO

World is ready to hear only from those who were already so popular.



கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார், ”இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர்
நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்

.அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப்
பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”

இன்னும் கொஞ்சம் சிரி


••
கொஞ்சம் சிரி , அதன் பின் இன்னும் கொஞ்சம் நிறையவே சிரி , அதன் பின்னும் இன்னும் கொஞ்சம். வெற்றியை எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய் , ஆறுதலை எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய். எல்லாமே உன் சிரிப்பு தான். இன்னும் கொஞ்சம் சிரி ! :)
••
Smile , cuz that's the Path of life

People who cannot kill you dreams assasiinate your character


••
உங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் , கொல்ல முடியாத மனிதர்கள், பண்புகளையும், குணநலன்களையும் கொலை செய்யப் பார்ப்பார்கள்.
••
படிச்சது ! 

Path to nowhere -சூன்யத்தை நோக்கி ஒரு பயணம்



••
அற்ப சுகங்களை அடைதலுக்கு முன்னும் இழப்பதற்குப் பின்னும் இருக்கிற சமநிலை நிழலில் இளைப்பாறப் பயணித்துக் கொண்டிருக்கிறது மனம். அங்கு கிளைபரப்பிப் படர்ந்திருக்கும் மௌனத்தின் நிழலில் எத்தனை சந்தோஷம் இருக்கும்.!!! வேகத்தின் உச்சம் எவ்வளவோ அவ்வளவு வேகத்தில் சென்றங்கு சேர வேண்டும். எல்லாம் இருப்பதை விட எதுவும் இல்லாமல் இருப்பதில் இருக்கும் வாழ்க்கையின் தத்துவம் கற்றறிய வேண்டும்.
••
# Taking the air towards the 'Emptiness' - The Real path of Life!

Dont bother Such kinda people



••
சராசரி மனிதனின் விமர்சனம் உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால் அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான் ; நீ வெற்றி பெற்றால் நீ அதிர்ஷ்டசாலி என்பான் ; 
நீ செல்வந்தன் ஆனாலோ உன்னைப் பேராசைக்காரன் என்பான் ; அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதும் புரிந்து கொள்ள முடியாது.
••
- ராபர்ட் ஆலென் | Robert G. Allen

Simplicity



•• 
எளிமையின் தடத்திலிருந்து எப்போது விலகினோமோ அப்போதே உண்மையின் தடத்திலிருந்தும் விலகிவிட்டோம் ! 
••
Paulo coelho

Problems and perpectives



•• 
நம் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடித் புலம்புவதிலேயே நம் வாழ்க்கை தீர்ந்து கொண்டிருக்க... நம்மைப் போல வேறு சிலர் ஒவ்வொரு தீர்விலும் இருந்து ஒரு பிரச்சினையைக் கண்டுபிடித்து அதனை ஆராய்ந்து , விளையாடி ரசித்துக் கொண்டிருப்பார்கள்...! 
அதும் ஒரு வித்தியாசமான பார்வை , அணுகுமுறை தானே .. ! ஆச்சர்யம் நிறைந்த அனுபவங்கள் கிடைக்குமில்ல ? Being a philosopher, I have a problem for every solution என்கிறார் ராபட் செண்ட் என்பவர் ... 
•• 
வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கோணத்தில பார்க்கத் தூண்டுகிற வார்த்தைகள் ! Life has a single problem , and crores of beautiful ways to address it.'Think different' will be the two-word-solution!

Smile.. Because you can !


எதுக்கெடுத்தாலும் இந்த சிரிப்பு ஒன்ன சிரிச்சுக்கன்னு சொல்ற .... ஹ்ம்ம்... எல்லா நேரத்துலயும் அது என்கூடவே இருக்குறதால தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு ... அதான் விட்டுக் குடுக்காம சிரிச்சுட்டே இருக்கேன் !

# Ayamaloosfellow as many used to call me ! :)

துரோகம்



••
உங்கள் அகராதியில் 'உண்மைக்கு' நேரே எப்போது 'துரோகம்' எனப் பொருள் திருத்தி எழுதப்பட்டதோ , அன்றே நானும் எனது அகராதியில் திருத்திக் கொண்டுவிட்டேன் ... 

'நம்பிக்கையின்மை'க்கு நேரே இப்போது துரோகம் !
••