Tuesday, December 4, 2012

உனக்கு நீயே உற்றதுணை



உனக்காக உதவக்கூடியவர்கள் எல்லோரும் மௌனம் சாதிப்பது , "உனக்கு நீயே உற்றதுணை" என்னும் பேருண்மையை உனக்கு உணர்த்துவதற்காகத் தான் ! 

He is respected more, who makes others laugh.



சிந்திக்க வைப்பவனை விட சிரிக்க வைப்பவனுக்கு மதிப்பு அதிகம் !

தோள் கொடுப்பவனே நண்பன் !



நூறு பேர் உன்னை புகழும் போது கூட்டத்தில் இன்னொருவனாய் சேர்ந்து கொள்பவன் சந்தர்ப்பவாதி ... ஆயிரம் பேர் உன்னை எதிர்த்தாலும் உனக்குத் துணை நின்று தோள் கொடுப்பவனே நண்பன் !

மாண்டு மட்டும் போவதில்லை அன்பு ...



எத்தனை மனிதர்கள் வெறிகொண்டு விஷ உணர்வூட்டினாலும் மாண்டு மட்டும் போவதில்லை அன்பு ... 
கண்காணா இடத்தில், கைக்கெட்டாத தூரத்தில், எங்கேனும் ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் ! சத்தியமாக அழிவில்லை !

Kiss speaks everything



ஈரமுத்தம்
பேசும் மொழிதான் 
இயற்கையின் 
ஆதிமொழியும் 
அன்பின் 
சொந்தமொழியும் !

பிரபா
(Pic : Dad's Creative Photography with his daughters.)

Truth Never Fails


உண்மை - தன்னை அழிக்கப் போடப்படும் எவ்வித உரங்களையும் தின்று மேலும் வளருமே தவிர சாயாது !

It never Fades , only Grows better.

வீர சிவாஜி


படிச்சதில் ரொம்பப் பிடிச்சது # 03 

(Learn From Every Possible Sources. Don't neglect Anything.)

வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்
த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..

# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் !

How A Mother should be


ஒவ்வொரு தாயும் தன் குடும்பக் கூட்டிலிருக்கும் பறவைகளை மறந்தால்,மன்னித்தால்,விட்டுக் கொடுத்தால், 
ஒட்டுமொத்த தேசமே ஆசீர்வதிக்கப்படும், 
ஒரு தந்தை இதெல்லாம் செய்வதை விட !

நான் தான் பெரியவன்


"நான் தான் பெரியவன்" என்ற நம் மனக்கணக்கு,
நம்மை சாத்தானின் வலையில் வீழ வைக்கும் விதியின் கணக்கு!

தன்னலமில்லா கடவுள் நீதான் !


● 
சிரித்துக் கொண்டிருப்பவனை மேலும் சிரிக்க வைப்பதை விட, அழுகிற ஒருவனின் நான்கு சொட்டுக் கண்ணீரைக் குறைக்கப் பேசுவாயானால்... மனிதன் படைத்த அந்தத் தன்னலமில்லா கடவுள் நீதான் !

வாழும் போதே வாழ் !


இயற்கையின் கடைசிப் பக்கம் தீயில் வெந்து சாகும் போது 
உடன் சாகப் போகும் அன்பில்லா மனிதர்கள் 
அப்போது தங்கள் தவறுகளை உணர்வார்கள் .
ஆனால் அழிவின் விளிம்பில் அறிவு கூர்மயடைந்தால் என்ன ? 
மழுங்கிப் போனால் யாருக்கென்ன ? 
வாழும்போதே அன்பு செய் ! வாழும் போதே நேசி ! வாழும் போதே வாழ் !

Beauty lies inside

உன்னைச் சுற்றி இருப்பது எதுவாய் இருப்பினும் அதில் உன் சந்தோஷமும் நிறைந்திருக்கும். நீ புதிதாய் எதையும் உருவாக்கத் தேவையில்லை. இருக்கும் சந்தோஷத்தை நுகரக் கற்றுக்கொள். 
● 
Practice to Read, Listen, and Enjoy, Nature's Own Language.and then you don't have to seek happiness outside of it.Have a Great Day People
DwellInHappiness#16