Thursday, May 2, 2013

God is one


••
நபிகள் நாயகம் ஒரு நாள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார் . அவரை சந்தித்து உரையாட ஒரு கிறிஸ்தவ பாதிரியார் வந்தார் . இருவரும் நீண்ட நேரம் இதயம் கலந்து பேசி மகிழ்ந்தனர் .தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் நேரம் வந்துவிட்டது .என்று கூறியபடி பாதிரியார் எழுந்தார். கொளுத்தும் வெய்யிலில் ஏன் உங்களை வருத்திக் கொள்ளவேண்டும் ?நீங்கள் விரும்பினால் இங்கேயே இறைவனை பிரார்த்திக்கலாமே' என்று நபிகள் சொன்னதும் நெஞ்சம் நெகிழ்ந்த பாதிரியார் , அந்தப் பள்ளிவாசலின் ஒரு மூலையில் முழந்தாளிட்டு தேவனைப் பிரார்த்தித்தார்.

பாதிரியார் விடைபெற்று சென்ற பின் நாயகத்தின் தோழர்கள் , ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் இங்கு பிரார்த்தனை செய்தால் பள்ளிவாசலின் தூய்மை பறிபோய்விடாதா ? என்று பதட்டத்துடன் கேட்டனர். 

' நாம் வணங்கும் இறைவனும் அவர் வணங்கிய இறைவனும் ஒருவரே ' 
என்று அமைதியாக பதிலளித்தார் நபிகளார். இந்த உணர்வும் பார்வையும் தான் நம் உயிரின் முழு முதற் தேவை !

இறைவன் ஒருவனே ! மனிதர்களை நேசியுங்கள் . அன்பில் இறைவனைக் காணுங்கள் ! 
••
படிச்சதில் ரொம்பப் பிடிச்சது # 04

No comments:

Post a Comment