Tuesday, December 4, 2012
வீர சிவாஜி
படிச்சதில் ரொம்பப் பிடிச்சது # 03
(Learn From Every Possible Sources. Don't neglect Anything.)
வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்
(Learn From Every Possible Sources. Don't neglect Anything.)
வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்
த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..
# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் !
# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் !
Beauty lies inside
●
உன்னைச் சுற்றி இருப்பது எதுவாய் இருப்பினும் அதில் உன் சந்தோஷமும் நிறைந்திருக்கும். நீ புதிதாய் எதையும் உருவாக்கத் தேவையில்லை. இருக்கும் சந்தோஷத்தை நுகரக் கற்றுக்கொள்.
●
Practice to Read, Listen, and Enjoy, Nature's Own Language.and then you don't have to seek happiness outside of it.Have a Great Day People
●
DwellInHappiness#16
Tuesday, October 30, 2012
Worlds Beautiful Women - Lizzie Inspires
Worlds Ugliest Women is Actually Wonderful , Graceful and Beautiful , Indeed ! : ( Worth reading, Inspiring, Sharing ) :
● உனது அவலட்சணமான தோற்றம் உலகில் ஒரு அழகான உத்வேகத்தையும் , தன்னம்பிக்கையும் , விட்டுச் செல்லுமாயின் நீயே உலகின் ஆகச் சிறந்த பேரழகன்/ பேரழகி !
● லிசி , (Lizzie Velasquez, 23, The so-called - Worlds Ugliest ( indeed, the Beautiful )Women) பிறந்தபோதே உடலில் சுரக்கும் சுரப்பிகளின் குறைவு காரணமாக உடல் எடை குறைந்து இப்படி ஒரு வினோத உருவத்தைப் பெற்றார். பள்ளிக் காலத்தி
லேயே பயங்கர வசவுகளுக்கு உள்ளானார். மேலும் இந்த நோயினால் அவதிப் படுவோர் உலகில் இரண்டே பேர்.
● யூ டியூபில் ஓடும் எட்டு நிமிட காணொளியில் ஒருவர் லிசியை , பேய் என்றும், போய் செத்துவிடு என்றும் விமரிசித்திருக்கிறார். இது போல இன்னும் எத்தனையோ கொடுமைகள் நடந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் ( கற்பனை அத்தனையும் கண்டிப்பா நடந்திருக்கும்) .
● அது போகட்டும் ... இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். உலகத்தின் மிகக் கேவலமான வார்த்தைத் தாக்குதல்களுக்கு இரையாகிய லிசி, இன்று ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர் (A Motivational Speaker, had Given Over 200 Workshops on Embracing Uniqueness, Dealing with bullies and overcoming Obstacles). இருநூறுக்கும் மேலான கருத்தரங்கில் பேசியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். (Entitled : Be Beautiful, Be You அழகாய் இருங்கள்., நீங்களாய் இருங்கள் ).
● ஏளனங்களை , எதிர்ப்புகளை, கிண்டல் கேலிகளை எப்படி சமாளிப்பது என்பதைத் தாங்கிய நம்பிக்கைக் கருவூலமாக ஒரு எழுத்தாளராக இருக்கிறார். மேலும் லிசி, டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்திருக்கிறார் :
"கடவுள் என்னை இப்படித்தான் படைத்திருக்கிறார். என்னை நான் எதன் பொருட்டும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை முடிந்த வரை இயல்பாய் வாழ முயற்சிக்கிறேன். என் மீது ஏவப்படும் எந்தத் தாக்குதல்களையும் , வசவுகளையும் பெரிது படுத்திக் கொள்வதில்லை , அவைகளை வெறும் வார்த்தைகளாகவே பார்க்கிறேன். எல்லாவற்றையும் கேட்டுச் சிரித்துக் கொள்வேன் .நான் என்பது என் தோற்றத்தைப் பொறுத்ததல்ல என் செயல்களைப் பொறுத்ததே. மேலும் , நான் என்னைக் கிண்டலடிப்பவர்களின் அளவுக்குத் தரம் தாழ்ந்து கீழிறங்கி ஒருபோதும் செல்வதில்லை . என் பதிலடியை என் நம்பிக்கையின் மூலமும், வெற்றியின் மூலமும் மட்டும் காட்ட விரும்புவேன் ". என்றார் ....
என் இனிய மக்களே ...இன்னுமென்ன தன்னம்பிக்கை வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள் ? நீங்கள் யாராக , எப்படி இருக்கிறீர்களோ , அது தான் உலகின் ஆகச் சிறந்த அழகு "
-: பிரபாகரன் சேரவஞ்சி :-
Subscribe to:
Posts (Atom)
.jpg)







.jpg)






