Tuesday, October 30, 2012

Worlds Beautiful Women - Lizzie Inspires



Worlds Ugliest Women is Actually Wonderful , Graceful and Beautiful , Indeed ! :  ( Worth reading, Inspiring, Sharing ) :

உனது அவலட்சணமான தோற்றம் உலகில் ஒரு அழகான உத்வேகத்தையும் , தன்னம்பிக்கையும் , விட்டுச் செல்லுமாயின் நீயே உலகின் ஆகச் சிறந்த பேரழகன்/ பேரழகி ! 

● லிசி , (Lizzie Velasquez, 23, The so-called - Worlds Ugliest ( indeed, the Beautiful )Women) பிறந்தபோதே உடலில் சுரக்கும் சுரப்பிகளின் குறைவு காரணமாக உடல் எடை குறைந்து இப்படி ஒரு வினோத உருவத்தைப் பெற்றார். பள்ளிக் காலத்தி
லேயே பயங்கர வசவுகளுக்கு உள்ளானார். மேலும் இந்த நோயினால் அவதிப் படுவோர் உலகில் இரண்டே பேர்.

● யூ டியூபில் ஓடும் எட்டு நிமிட காணொளியில் ஒருவர் லிசியை , பேய் என்றும், போய் செத்துவிடு என்றும் விமரிசித்திருக்கிறார். இது போல இன்னும் எத்தனையோ கொடுமைகள் நடந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் ( கற்பனை அத்தனையும் கண்டிப்பா நடந்திருக்கும்) .


● அது போகட்டும் ... இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். உலகத்தின் மிகக் கேவலமான வார்த்தைத் தாக்குதல்களுக்கு இரையாகிய லிசி, இன்று ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர்  (A Motivational Speaker, had Given Over 200 Workshops on Embracing Uniqueness, Dealing with bullies and overcoming Obstacles). இருநூறுக்கும் மேலான கருத்தரங்கில் பேசியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். (Entitled : Be Beautiful, Be You அழகாய் இருங்கள்., நீங்களாய் இருங்கள் ).

● ஏளனங்களை , எதிர்ப்புகளை, கிண்டல் கேலிகளை எப்படி சமாளிப்பது என்பதைத் தாங்கிய நம்பிக்கைக் கருவூலமாக ஒரு எழுத்தாளராக இருக்கிறார். மேலும் லிசி, டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்திருக்கிறார் : 
"கடவுள் என்னை இப்படித்தான் படைத்திருக்கிறார். என்னை நான் எதன் பொருட்டும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை முடிந்த வரை இயல்பாய் வாழ முயற்சிக்கிறேன். என் மீது ஏவப்படும் எந்தத் தாக்குதல்களையும் , வசவுகளையும் பெரிது படுத்திக் கொள்வதில்லை , அவைகளை வெறும் வார்த்தைகளாகவே பார்க்கிறேன். எல்லாவற்றையும் கேட்டுச் சிரித்துக் கொள்வேன் .நான் என்பது என் தோற்றத்தைப் பொறுத்ததல்ல என் செயல்களைப் பொறுத்ததே. மேலும் , நான் என்னைக் கிண்டலடிப்பவர்களின் அளவுக்குத் தரம் தாழ்ந்து கீழிறங்கி ஒருபோதும் செல்வதில்லை . என் பதிலடியை என் நம்பிக்கையின் மூலமும், வெற்றியின் மூலமும் மட்டும் காட்ட விரும்புவேன் ". என்றார் ....
என் இனிய மக்களே ...இன்னுமென்ன தன்னம்பிக்கை வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள் ? நீங்கள் யாராக , எப்படி இருக்கிறீர்களோ , அது தான் உலகின் ஆகச் சிறந்த அழகு "

 -: பிரபாகரன் சேரவஞ்சி :-

No comments:

Post a Comment