அடை மழை உன் அன்பு
முழுக்க நனைந்துவிட்டேன்
மழைவிட்ட பின்னும்
மண்வாசம் மிச்சமிருப்பது போல
என்னிடம் இன்னும் ஒட்டி இருக்கிறது
உனது வாஞ்சை
உனது பெருங்காதல்
உனது பேரன்பின் பெருநெடி
உனது தூய நேசத்தின் குளிர் காற்று
எல்லாம் எல்லாம்
என் உயிரின் ஆழத்தில் இனிக்கிறது .
உன்னை வழியனுப்பி விட்டு
ஏதோ ஒன்று குறைவதுபோலவே
வீடுவந்து சேர்ந்துவிட்டேன் .
உன் ஆதூரம்
என் மனவெளியெங்கும்
பூத்திருக்கிறது
இளம்மஞ்சள் நிறத்தில் .
அத்தனையும் அழகு
உனதன்பை போலவே :-)
No comments:
Post a Comment