Tuesday, October 30, 2012

Worlds Beautiful Women - Lizzie Inspires



Worlds Ugliest Women is Actually Wonderful , Graceful and Beautiful , Indeed ! :  ( Worth reading, Inspiring, Sharing ) :

உனது அவலட்சணமான தோற்றம் உலகில் ஒரு அழகான உத்வேகத்தையும் , தன்னம்பிக்கையும் , விட்டுச் செல்லுமாயின் நீயே உலகின் ஆகச் சிறந்த பேரழகன்/ பேரழகி ! 

● லிசி , (Lizzie Velasquez, 23, The so-called - Worlds Ugliest ( indeed, the Beautiful )Women) பிறந்தபோதே உடலில் சுரக்கும் சுரப்பிகளின் குறைவு காரணமாக உடல் எடை குறைந்து இப்படி ஒரு வினோத உருவத்தைப் பெற்றார். பள்ளிக் காலத்தி
லேயே பயங்கர வசவுகளுக்கு உள்ளானார். மேலும் இந்த நோயினால் அவதிப் படுவோர் உலகில் இரண்டே பேர்.

● யூ டியூபில் ஓடும் எட்டு நிமிட காணொளியில் ஒருவர் லிசியை , பேய் என்றும், போய் செத்துவிடு என்றும் விமரிசித்திருக்கிறார். இது போல இன்னும் எத்தனையோ கொடுமைகள் நடந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் ( கற்பனை அத்தனையும் கண்டிப்பா நடந்திருக்கும்) .


● அது போகட்டும் ... இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். உலகத்தின் மிகக் கேவலமான வார்த்தைத் தாக்குதல்களுக்கு இரையாகிய லிசி, இன்று ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர்  (A Motivational Speaker, had Given Over 200 Workshops on Embracing Uniqueness, Dealing with bullies and overcoming Obstacles). இருநூறுக்கும் மேலான கருத்தரங்கில் பேசியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். (Entitled : Be Beautiful, Be You அழகாய் இருங்கள்., நீங்களாய் இருங்கள் ).

● ஏளனங்களை , எதிர்ப்புகளை, கிண்டல் கேலிகளை எப்படி சமாளிப்பது என்பதைத் தாங்கிய நம்பிக்கைக் கருவூலமாக ஒரு எழுத்தாளராக இருக்கிறார். மேலும் லிசி, டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்திருக்கிறார் : 
"கடவுள் என்னை இப்படித்தான் படைத்திருக்கிறார். என்னை நான் எதன் பொருட்டும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை முடிந்த வரை இயல்பாய் வாழ முயற்சிக்கிறேன். என் மீது ஏவப்படும் எந்தத் தாக்குதல்களையும் , வசவுகளையும் பெரிது படுத்திக் கொள்வதில்லை , அவைகளை வெறும் வார்த்தைகளாகவே பார்க்கிறேன். எல்லாவற்றையும் கேட்டுச் சிரித்துக் கொள்வேன் .நான் என்பது என் தோற்றத்தைப் பொறுத்ததல்ல என் செயல்களைப் பொறுத்ததே. மேலும் , நான் என்னைக் கிண்டலடிப்பவர்களின் அளவுக்குத் தரம் தாழ்ந்து கீழிறங்கி ஒருபோதும் செல்வதில்லை . என் பதிலடியை என் நம்பிக்கையின் மூலமும், வெற்றியின் மூலமும் மட்டும் காட்ட விரும்புவேன் ". என்றார் ....
என் இனிய மக்களே ...இன்னுமென்ன தன்னம்பிக்கை வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள் ? நீங்கள் யாராக , எப்படி இருக்கிறீர்களோ , அது தான் உலகின் ஆகச் சிறந்த அழகு "

 -: பிரபாகரன் சேரவஞ்சி :-

A Faultless Friend


குறையில்லா நண்பனைத் தேடினால் , 
நண்பனில்லா மனிதனாகத் தனித்துத் தான் 
நிற்க வேண்டும் !

- ● ரூமி

Build Your thoughts, for You Create a way to others as well



நல்ல
எண்ணங்களையும்
வார்த்தைகளையும் 
அடுக்கிக் 
கொண்டே 
இருப்பவன்
தன்னை மறந்து
பிறர்க்குப் பாதை
அமைத்துத்
தருகிறான் !
பிரபா

அன்பு ஒன்று மட்டுமே



அழவைத்தாலும், அழுது முடிப்பதற்குள் சிரிக்க வைத்துவிடுவது அன்பு ஒன்று மட்டுமே .

பிரபா
 

ஒரு குழந்தையும் கரடி பொம்மைகளும்



ஒரு 
குழந்தையும் 
அதோடு
விளையாட 
ஓரிரு கரடி
பொம்மைகளும்
இருக்கும்
வீடு...
கவலைகளை
சிதறடிக்கும்
சொர்கம் !

Wednesday, October 24, 2012

Seek Within



சந்தோஷத்தை தனக்குள் தேடுபவன் திசைமாறிப் போகலாம்... தொலைந்து மட்டும் போவதில்லை !

The one who seeks his happiness within , might be deviated to and fro, but still he is in a safest way and he will hit the peak-of-happiness one day. Make a Consistent Exploration.
 DwellinHappiness # 15

There's a way beyond


There's a way beyond Good n Bad... I will meet you there...
நன்மை தீமைகளைக் கடந்த சமநிலை ஒன்றிருக்கிறது.. எல்லோரும் சிரித்து முடித்து /சண்டை முடித்து அங்கு தான் வந்தாக வேண்டும்.. வாருங்கள் , நான் உங்களை அங்கு சந்திக்கிறேன் !
Thought Inspired From RUMI

Friday, October 19, 2012

Villages and Its serenity Attracts



கொடுத்த வைத்தவர்கள்

கிராமங்களின் அமைதியை

சுவாசிப்பவர்கள்!

Obama Inspires


தன் மனைவி மற்றும் குழந்தைகளை ஒவ்வொரு மேடையிலும் உயர்த்திப் பேசும் பழக்கம் ஒபாமாவின் தனித்துவம் ! 

For every time He starts his speech with a note on his Darling and Dear Children, I go Speechless. The Way he Loves his family is Awesome and this is why he stands out to be a great motivator of alltime and I love him Despite all his Political Moves.

# Great Obama

Love is Everything



அவனியின் 

பேரியக்கம்

அன்பென்னும்

கருவால்
 
ஆனது !

Put A Smile


பொறாமையில் எழும் 

எதிர்ப்புகளைக் கண்டு
 
சிரிக்கத் துவங்கும் போதே 

பாதி வெற்றியை 

நெருங்கி விடுகிறோம் !

Be inspired From Your very Own Soul


தன் சந்தோஷங்களை எல்லாம் தானே எழுதிக் கொள்கிற யாரோ ஒருவனைப் பார்த்துத் தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. உங்கள் சந்தோஷத்தின் இயக்குனரும் நீங்களே ! 
You are the Director cum actor of your own life and happiness. Dont seek out Dialogues or scenes from others Life. Be Inspired from your very own soul. Have a Great Day ppl.
DwellInHappiness # 14

Friday, October 12, 2012

Seek Your Happiness by Making other Smile


உன் மனம் நோகும் போது 

பிறர் உதட்டில் 

புன்னகை விதைக்கக் 

கிளம்பிவிடு!

உனக்கான ஆறுதலை 

பிறர் மகிழ்ச்சியில் 

தேடிக்கொள் !

The Disease of ME


புவியெங்கும் 
பரவிக்கிடக்கிறது

'நான்' 

எனும் 
மிகக்கொடிய 
நோய்!

Anurag Inspires


● 
2004 இல் இன்னும் நீங்கள் இரண்டு மாதம் தான் உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். 

● 
சிகிச்சையின் பலனாகவும், நம்பிக்கையாலும் புற்றுநோயில் இருந்து மீண்டார் , அமெரிக்க புற்றுநோய் கழகத்தின் விருதினை 2006'ல்பெற்றார். 

● 
அப்போதே புற்றுநோயினால் இறந்திருந்தால் இன்று ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பர்பி (Barfi!-Hindi) திரைப்படம் நம்மிடையே இருந்திருக்காது. 

● 
முரட்டுத்தனமான அந்தக் குழந்தை - அனுராக் பாசு : பர்பி திரைப்படத்தின் இயக்குனர் . 

உயிரைத் தட்டி எழுப்பி சந்தோஷப்படுத்தும் இவர் போன்ற கலைஞர்கள் என்றென்றும் நலமுடன் இருக்க வேண்டும் 

Love and Courage



அன்பும்

நம்பிக்கையும்

சேர்கையில்

புவியின்

ஆகச் சிறந்த

இரு சக்திகள்

கை கோர்க்கிறது !

Haters Really Loves us


நம்மைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள் ,
பெரும்பாலும் எதிரணியில் இருந்துகொண்டு 
நம்மை வெளிப்படையாக விரும்ப முடியவில்லையே 
என்று ஆதங்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்

Tortoise and Rabbit and Love and Hate

அன்பு
ஆமை 
வேகத்திலும் , 
வெறுப்பு 
முயல் 
வேகத்திலும் , 
சென்று இலக்கை 
அடைகிறது!

Some Peoples Words Really Hurts



சில மனிதர்களின் 
வார்த்தைகள் பட்டால்...
பாம்புகளும் விசமேறிச் 
செத்துவிடும் போல!

Fake Smiles are Almost Equal to Hate Smileys


போலிச்சிரிப்புகள்

கண்ணீரின் 

உடன்பிறப்புகள்

wish for others what you wish for yourself


பிறர் தேவைகளையே
 
தன் ஆசைகளாக்கிக் கொள்கிறவன்

யாராயிருந்தாலும் அவன் கடவுள் !

Celebrate every Problems


எல்லா எதிர்ப்புகளும் 

போற்றி ரசிக்கப் படவேண்டியவை

Giving is the real Pleasure


எடுத்துக் கொள்வதை விட, கொடுத்துப் பழகுவது தான் ஆகச் சிறந்த சந்தோஷம் !
GIVING , perpetually gives the Profound and immense pleasure, than what RECEIVING Gives You .
Dwell in Happiness # 13

Without A Deviation , Success Wont Taste at all



வெற்றிப் பாதையில் இருந்து கொஞ்சம் கூட விலகாத பயணம், வெற்றி பெற்ற பிறகு அதிகம் ருசிப்பதே இல்லை ! 
Be happy that even if you are deviated from the actual path of victory, you will have/experience a lots of fun buried in it. Enjoy the journey to its fullest and Celebrate everything you get in Life.
DwellInHappiness # 12

Monday, October 8, 2012

Ego must Go



நம்மைக் கொஞ்சமும் , பிறரை நிறையவும் எடுத்து ஒன்றாய் சேர்த்து செய்த கோவில்-அன்பு.
அதற்குள் கர்வத்தைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் அனுமதியுங்கள்..! 

Love is a temple which is constructed by a blend of, Kilograms-of-YOU and Tons-of-OTHERS (beloveds,Precisely). Allow every thoughts into your mind temple , Except EGO. Have a happy Living.
● 
Wish you a Wonderful Day ppl.

DwellInHappiness # 11

Love and Hate -அன்பும் வெறுப்பும்



அன்பு-ஆமை வேகத்திலும் , 
வெறுப்பு முயல் வேகத்திலும் , 
சென்று இலக்கை அடைகிறது!

Love Your Neighbors



கண்முன் நிற்கிற மனிதர்களை நேசிக்க முடியாதவர்கள் , எப்படி கண்ணுக்குத் தெரியாத கடவுளை மட்டும் நேசிக்கிறீர்கள் ?

How come you people Who Pretend to Love Your neighbors, could love the invisible god alone ? Think about it & Be Advised


DwellInHappiness #10

Sunday, October 7, 2012

Be a Smiling Flower


வாழ்கிற வரை சிரித்துக்கொண்டே இருக்கிற மலர்களிடம் அந்த ஒன்றை மட்டும் கற்றுக் கொள்ளுங்கள்.அழுவதற்கல்ல வாழ்க்கை , சிரிப்பதற்கே
Derive that single attitude of those Aromatic-Darling-flowers , that smile through out their lifetime. and keep it with you 24/7. Its more than enough to pursue a peaceful life.
# Dwell in Happiness 09

Amelioarate your surroundings as well



பிறரையும் தூக்கி விடுவீர்கள் என்கிற நம்பிக்கையோடு தான் சமுதாயம் உங்களை உயர்த்தி விடுகிறது !

Your victory has an untold secret buried in it. It should uplift not only you , but also the people who stay around you, who rely on you. Use your victory to build a platform for the people who needs your help actually.

Endless Cycle Life is . . .



நடக்கவே கூடாதென்று நீங்கள் எதை எல்லாம் நினைக்கிறீர்களோ , அவைகளெல்லாம் நடக்க வேண்டும் என்று உடனே ஆசைப்படுங்கள் . முரண்களின் முழுத் தொகுப்பு வாழ்க்கை , வேண்டாததைக் வேண்டுமென்றே வந்து கொடுக்கும், வேண்டுவதை வெடுக்கெனப் பிடுங்கிப் போகும் !

Yearn for the flip side of what you profusely expect . Its Very sure, that you or going to get the contrary of things in life . So , Expect tragedies and henceforth, be prepared for it. Life will make a U-turn and wud play its own contrary-game & will give you the real happiness.

● DwellinHappiness #05

Friday, October 5, 2012

Stop Complaining , Go Solve the Problem


உலகம் அசிங்கமானது தான், நீங்கள் அதை அழகாக்க ஏதும் செய்யாத வரை !
Dont yell at niftiness of the world, unless you are ready to try something to reform/renovate it.
DwellinHappiness # 04