••
தூரத்துப் பச்சை மரத்தின் உச்சியில்
ஒரு கடவுள் இருக்கிறான்
என்றாரோ சொன்னார்கள்
ஓடோடிச் சென்று
மேலேறிப் பார்த்தேன் !
ஓங்கியடித்த ஊதக்காற்றும்
அதைத்
தாங்கிக்கொண்டென்னைப்
பார்த்த இலைகளும்
ஒருகுரலெடுத்துப் பேசின...
கீழிறங்கிப் போய்
நிலத்திருக்கும் உயிர்களை நேசி!
நீ ஒரு கடவுள்
நீ நேசிப்பவன் ஒரு கடவுள்...
எத்தனை உயிர்களை
நேசிக்கிறாயோ
அத்தனை கடவுளை
நிலமிசை காண்கிறாய் ...!
ஓய்ந்தது பெருங்காற்று
உண்மையுணர்ந்து
கீழிறங்கினேன் !
••
தூரத்துப் பச்சை மரத்தின் உச்சியில்
ஒரு கடவுள் இருக்கிறான்
என்றாரோ சொன்னார்கள்
ஓடோடிச் சென்று
மேலேறிப் பார்த்தேன் !
ஓங்கியடித்த ஊதக்காற்றும்
அதைத்
தாங்கிக்கொண்டென்னைப்
பார்த்த இலைகளும்
ஒருகுரலெடுத்துப் பேசின...
கீழிறங்கிப் போய்
நிலத்திருக்கும் உயிர்களை நேசி!
நீ ஒரு கடவுள்
நீ நேசிப்பவன் ஒரு கடவுள்...
எத்தனை உயிர்களை
நேசிக்கிறாயோ
அத்தனை கடவுளை
நிலமிசை காண்கிறாய் ...!
ஓய்ந்தது பெருங்காற்று
உண்மையுணர்ந்து
கீழிறங்கினேன் !
••