Showing posts with label Inspiration. Show all posts
Showing posts with label Inspiration. Show all posts

Friday, June 7, 2013

Be a Horse - ஒரு குட்டிக் கதை பெரிய்ய நீதி





••
வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"தம்பி .. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்..
••

Sunday, April 21, 2013

Bala and Vikram Inspires...


நான் ஆக்சிடெண்ட்ல அடிபட்டுக் கிடந்தப்போ , எங்க சொந்தக் காரர் ஒருத்தர் .. அவரும் சினிமாகாரர் தான் ... இனிமே நீ எங்க சினிமால நடிக்க போற ? உனக்குன்னு ஏதாவது நொண்டி காரெக்டர் கிடைக்கும்ல'ன்னு சொன்னார்.... எவ்ளோ வக்கிரமான வார்த்தை ...நாம ஜெயிக்கணும் பாலா .... 

"பழி வாங்கறதுன்னா ... அடிக்கறது, உதைக்கிறது , அவமானப் படுத்தறது , மட்டுமில்லையே .... அவங்க கண்ணு முன்னாலேயே ஜெயிக்கணும் ..."

அப்போ நான் தனியா இருந்தேன் . இப்போ கூட நீங்க இருக்கீங்க .. சேது .இருக்கான் ..நாம ஜெயிப்போம் பாலா .... ப்ராமிஸ் பாலா ! " என்ற விக்ரமின் வார்த்தைகளை வாழ்க்கை முழுக்க நினைவில் .வைத்திருப்பேன் ...

- பாலாவின் இவன்தான் பாலா புத்தகத்திலிருந்து... 

(எனக்குப் புத்தகத்திலேயே மிகவும் பிடித்த விக்ரம் மற்றும் பாலாவின் "சேது" பிறந்த கதை செம நம்பிக்கை டானிக் (A Must read (chapter in that) Book ) )

Tuesday, October 30, 2012

Worlds Beautiful Women - Lizzie Inspires



Worlds Ugliest Women is Actually Wonderful , Graceful and Beautiful , Indeed ! :  ( Worth reading, Inspiring, Sharing ) :

● உனது அவலட்சணமான தோற்றம் உலகில் ஒரு அழகான உத்வேகத்தையும் , தன்னம்பிக்கையும் , விட்டுச் செல்லுமாயின் நீயே உலகின் ஆகச் சிறந்த பேரழகன்/ பேரழகி ! 

● லிசி , (Lizzie Velasquez, 23, The so-called - Worlds Ugliest ( indeed, the Beautiful )Women) பிறந்தபோதே உடலில் சுரக்கும் சுரப்பிகளின் குறைவு காரணமாக உடல் எடை குறைந்து இப்படி ஒரு வினோத உருவத்தைப் பெற்றார். பள்ளிக் காலத்தி
லேயே பயங்கர வசவுகளுக்கு உள்ளானார். மேலும் இந்த நோயினால் அவதிப் படுவோர் உலகில் இரண்டே பேர்.

● யூ டியூபில் ஓடும் எட்டு நிமிட காணொளியில் ஒருவர் லிசியை , பேய் என்றும், போய் செத்துவிடு என்றும் விமரிசித்திருக்கிறார். இது போல இன்னும் எத்தனையோ கொடுமைகள் நடந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் ( கற்பனை அத்தனையும் கண்டிப்பா நடந்திருக்கும்) .


● அது போகட்டும் ... இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். உலகத்தின் மிகக் கேவலமான வார்த்தைத் தாக்குதல்களுக்கு இரையாகிய லிசி, இன்று ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர்  (A Motivational Speaker, had Given Over 200 Workshops on Embracing Uniqueness, Dealing with bullies and overcoming Obstacles). இருநூறுக்கும் மேலான கருத்தரங்கில் பேசியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். (Entitled : Be Beautiful, Be You அழகாய் இருங்கள்., நீங்களாய் இருங்கள் ).

● ஏளனங்களை , எதிர்ப்புகளை, கிண்டல் கேலிகளை எப்படி சமாளிப்பது என்பதைத் தாங்கிய நம்பிக்கைக் கருவூலமாக ஒரு எழுத்தாளராக இருக்கிறார். மேலும் லிசி, டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்திருக்கிறார் : 
"கடவுள் என்னை இப்படித்தான் படைத்திருக்கிறார். என்னை நான் எதன் பொருட்டும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை முடிந்த வரை இயல்பாய் வாழ முயற்சிக்கிறேன். என் மீது ஏவப்படும் எந்தத் தாக்குதல்களையும் , வசவுகளையும் பெரிது படுத்திக் கொள்வதில்லை , அவைகளை வெறும் வார்த்தைகளாகவே பார்க்கிறேன். எல்லாவற்றையும் கேட்டுச் சிரித்துக் கொள்வேன் .நான் என்பது என் தோற்றத்தைப் பொறுத்ததல்ல என் செயல்களைப் பொறுத்ததே. மேலும் , நான் என்னைக் கிண்டலடிப்பவர்களின் அளவுக்குத் தரம் தாழ்ந்து கீழிறங்கி ஒருபோதும் செல்வதில்லை . என் பதிலடியை என் நம்பிக்கையின் மூலமும், வெற்றியின் மூலமும் மட்டும் காட்ட விரும்புவேன் ". என்றார் ....
என் இனிய மக்களே ...இன்னுமென்ன தன்னம்பிக்கை வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள் ? நீங்கள் யாராக , எப்படி இருக்கிறீர்களோ , அது தான் உலகின் ஆகச் சிறந்த அழகு "

 -: பிரபாகரன் சேரவஞ்சி :-

Friday, October 19, 2012

Obama Inspires

●
தன் மனைவி மற்றும் குழந்தைகளை ஒவ்வொரு மேடையிலும் உயர்த்திப் பேசும் பழக்கம் ஒபாமாவின் தனித்துவம் ! 
●
For every time He starts his speech with a note on his Darling and Dear Children, I go Speechless. The Way he Loves his family is Awesome and this is why he stands out to be a great motivator of alltime and I love him Despite all his Political Moves.
●
# Great Obama

Friday, October 12, 2012

Anurag Inspires


● 
2004 இல் இன்னும் நீங்கள் இரண்டு மாதம் தான் உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். 

● 
சிகிச்சையின் பலனாகவும், நம்பிக்கையாலும் புற்றுநோயில் இருந்து மீண்டார் , அமெரிக்க புற்றுநோய் கழகத்தின் விருதினை 2006'ல்பெற்றார். 

● 
அப்போதே புற்றுநோயினால் இறந்திருந்தால் இன்று ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பர்பி (Barfi!-Hindi) திரைப்படம் நம்மிடையே இருந்திருக்காது. 

● 
முரட்டுத்தனமான அந்தக் குழந்தை - அனுராக் பாசு : பர்பி திரைப்படத்தின் இயக்குனர் . 

# 
உயிரைத் தட்டி எழுப்பி சந்தோஷப்படுத்தும் இவர் போன்ற கலைஞர்கள் என்றென்றும் நலமுடன் இருக்க வேண்டும்